தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.டி., துறை யாருக்கு தேவை?

ஐ.டி., துறை யாருக்கு தேவை?

ஐ.டி., துறை யாருக்கு தேவை?


UPDATED : ஏப் 08, 2013 12:00 AM

ADDED : ஏப் 08, 2013 08:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2013 12:00 AM ADDED : ஏப் 08, 2013 08:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "தனித் திறமை உள்ளவர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில், சிறந்து விளங்கலாம்" என, டி.சி.எஸ்., நிறுவன துணைத் தலைவர் ஹேமா கோபால் தெரிவித்தார்.

"தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில், "தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய போக்கு" என்ற தலைப்பில், அவர் பேசியதாவது:

ஒவ்வொரு ஆண்டும், டி.சி.எஸ்., நிறுவனம் சார்பில், கல்லூரிகளில், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில், நிறுவனத்திற்கு, 60 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு, 20 முதல் 25 ஆயிரம் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வங்கி, பைனான்ஸ், இன்சூரன்ஸ், மருத்துவம், பொறியியல் உட்பட, அனைத்து துறைகளிலும், தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு முக்கியமானது. துறையில் ஆழ்ந்த நுண்ணறிவு, மொழித்திறன், ஆங்கிலத்தில் தகவல் தொடர்பு, ஆளுமை பண்பு உள்ளவர்களுக்கு, தகவல் தொழில் நுட்ப துறையில், வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

தனித் திறமை உள்ளவர்கள், தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்கலாம். மற்ற நாட்டிலும் சென்று பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள், தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கலாம். திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட, கிராமப்புற பகுதியில், தகவல் தொழில் நுட்ப துறையை கொண்டு செல்ல உள்ளோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us