தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை மீது தயா கல்லூரி அவமதிப்பு வழக்கு

அண்ணா பல்கலை மீது தயா கல்லூரி அவமதிப்பு வழக்கு

அண்ணா பல்கலை மீது தயா கல்லூரி அவமதிப்பு வழக்கு


UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM

ADDED : ஜூலை 26, 2013 07:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM ADDED : ஜூலை 26, 2013 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தயா கல்லூரி அலுவலக மேலாளர் ஜெயகரன் கிரப் தாக்கல் செய்த மனு: தயா கல்லூரிக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. அண்ணா பல்கலை தற்காலிக இணைவிப்பு வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தோம்.

நீதிபதிகள், "பல்கலை நிர்வாகம், ஆய்வுக் குழுவை அனுப்பி அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும்; 10 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என ஜூலை 3ம் தேதி, உத்தரவிட்டனர்.

பல்கலைகுழு, ஜூலை 11ம் தேதி, ஆய்வு செய்தது. மதுரை கலெக்டரின் கடிதம் அடிப்படையில், இணைவிப்பு வழங்க பல்கலை பதிவாளர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து, ஏற்கனவே, ஐகோர்ட்டில் மனு செய்தது, நிலுவையில் உள்ளது.

ஐகோர்ட் உத்தரவை, பதிவாளர் கணேசன் நிறைவேற்றவில்லை. அவர் மீது, கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இம்மனு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், விசாரணைக்கு வரவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us