தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ் 2 உடனடி தேர்வு: 20.5 சதவீதம் பேர் தேர்ச்சி


UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM

ADDED : ஜூலை 26, 2013 08:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM ADDED : ஜூலை 26, 2013 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்று, அதே கல்வியாண்டில், உயர்கல்வியை தொடரும் வகையில், உடனடித் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இந்த தேர்வுக்கு தயாராக, போதிய கால அவகாசம் இல்லாத நிலையில், மாணவர்கள், தேர்வை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால், தேர்ச்சி சதவீதம், பெரிய அளவிற்கு உயரவில்லை.

ஒவ்வொரு முறையும், 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையிலான மாணவர்கள், தேர்ச்சி பெறுவர். இந்த முறை, பிளஸ் 2 உடனடித் தேர்வில், வெறும், 20.5 சதவீத மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வெழுதிய 66,576 மாணவர்களில், 13,629 மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர். உடனடித் தேர்வு தேர்ச்சி சதவீதம், படிப்படியாக குறைந்து வருவதால், இத்திட்டம் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உடனடித் தேர்வு நடந்த இரு மாதங்களில், செப்டம்பர், அக்டோபரில், தனித்தேர்வு வருகிறது.

பொதுத் தேர்வுக்குப் பின், செப்டம்பர், அக்டோபர் தேர்வை சந்திக்க, போதிய கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us