UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 08:11 AM
வாழ்வியல் மாற்றத்தால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்று நோய், உடல் பருமன் உள்ளிட்ட, நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில், சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு, யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக, இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, ஐந்து வாரங்களுக்கு, 12 நாட்கள் என, மாலை, 4:00 மணி முதல் 5:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.
இதுகுறித்து, சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர், கனகசபை, கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு, யோகா பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள, 400 மருத்துவ கல்லூரிகளில், சென்னை மருத்துவ கல்லூரியில் மட்டுமே, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில், அனைத்து மாணவர்களுக்கும், யோகா பயிற்சி திட்டம் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, கனகசபை கூறினார்.
