கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தின் இலவச வீடியோகிராஃபி வகுப்பு
கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தின் இலவச வீடியோகிராஃபி வகுப்பு
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 10:50 AM
தஞ்சாவூர்: "தஞ்சையில், ஐ.ஓ.பி., கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக தொழில்முறை டிஜிட்டல் ஃபோட்டோ, வீடியோகிராஃபி பயிற்சி முகாம் நாளை 29ம் தேதி துவங்குகிறது" என, பயிற்சி மையத்தின் இயக்குனர் வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.
தஞ்சை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் வெற்றிச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சையில், கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயனுள்ள வகையில் பல்வேறு பயிற்சிகள் இலவசமாக இளைஞர், பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, நபார்டு நிதியுதவியுடன் தொழில்முறை டிஜிட்டல் ஃபோட்டோ மற்றும் வீடியோகிராஃபி பயிற்சி முகாம் நாளை 29ம் தேதி துவங்குகிறது.
இதில், காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 21 நாட்களுக்கு வகுப்பு நடக்கும். இப்பயிற்சியில் பங்கேற்று, தகுதி பெறும் அனைவருக்கும் பயிற்சி மையத்தில் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சி காலத்தில் மதிய உணவு, தேவையான பயிற்சி பொருட்கள் மையத்திலிருந்து இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இவ்வகுப்புகளில் திறமையான தொழில் வல்லுனர்களை பயிற்சிகளை வழங்குகின்றனர். தொடர்ந்து, அரசு மானியத்துடன் தொழில் துவங்க ஆலோசனை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர், தஞ்சை மாவட்டத்தினராக இருக்க வேண்டும்.
நாளை 29ம் தேதி காலை 9:30 மணிக்கு மையத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில், கல்விச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ரேஷன் கார்டு, மூன்று ஸ்டாம்ப் சைஸ் ஃபோட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.
விபரம் அறிய, தஞ்சை மருத்துவக்கல்லூரி ரோட்டில், ரெட்டிப்பாளையம் ரோடு, ஈஸ்வரி நகர் பஸ் ஸ்டாப்பில் பக்கிரிசாமி வீதியிலுள்ள பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 04362 - 242377 என்னும் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் http://iobtjrseti.webs.com என்னும் இணையதள முகவரியில் முன்பதிவும் செய்யலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
