மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப்போட்டி: பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
மாவட்ட மைய நூலகத்தில் ஓவியப்போட்டி: பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 10:57 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் வரும் 30ம் தேதி "மனிதநேயம்" என்ற தலைப்பில் ஒவியப்போட்டி நடக்கிறது.
நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி வரும் 30ம் தேதி மாலை 4 மணிக்கு பாளை. மாவட்ட மைய நூலகத்தில் நடக்கிறது. "மனிதநேயம்" என்ற தலைப்பில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம்.
ஒரு மணிநேரம் மட்டுமே போட்டி நடைபெறும். மாணவ, மாணவிகள் ஓவியம் வரைவதற்கான உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். வெற்றிபெறும் முதல் 3 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
