தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெரியார் பல்கலையில் முதுகலை சமூகவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரியார் பல்கலையில் முதுகலை சமூகவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரியார் பல்கலையில் முதுகலை சமூகவியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM

ADDED : ஜூலை 28, 2013 11:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM ADDED : ஜூலை 28, 2013 11:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் வெங்கடாசலம் கூறியிருப்பதாவது:

சேலம், பெரியார் பல்கலையில் இரண்டு ஆண்டு முதுகலை சமூகவியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க, ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு படித்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறவும், வழி செய்யும் வகையில், சமூகவியல் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதுகலை சமூகவியல் பாடப்பிரிவு, களப்பணிகள் பலவற்றை கொண்டிருப்பதால், பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சமூக நிறுவனங்களில் ஏராளமான பணிகளுக்கு வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பும் உள்ளது.

மனித வளமேம்பாடு அறிக்கை தயாரித்தல், கிராமப்புற களப்பணி, தொழிற்சாலை மற்றும் பல்வேறு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றுதல், மருத்துவமனை சம்பந்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்தல் போன்றவை இப்பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.

தலைமைப் பண்பு, ஆளுமைத்திறன், சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு, பெண்கள் மேம்பாடு, பழங்குடி இன மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்துதல், ஆண், பெண் விகிதாச்சார இடைவெளியை அகற்றுதல் போன்றவை சமூகவியல் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதால், படித்த உடனே வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும்.

விருப்பமுள்ள மாணவர்கள் பெரியார் பல்கலை சமூகவியல் துறையை நேரிலோ, 94423 60574 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us