பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில் பண்பாட்டு கல்வி பெற அழைப்பு
பெரம்பலூர் அறிவு திருக்கோவிலில் பண்பாட்டு கல்வி பெற அழைப்பு
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 10:40 AM
பெரம்பலூர்: "பெரம்பலூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நடந்தது வரும் அறிவுத் திருக்கோவிலில் யோகமும், மனித மாண்பும் தொடர்பான பட்டம், பட்டய, சான்றிதல் பயிற்சி பெறலாம்" என மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
"பெரம்பலூர் பாலக்கரை வேதாத்ரி நகரில் மனவளக்கலை மன்றத்தின் அறிவுத்திருக்கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து யோகமும், மனித மாண்பும் தொடர்பான பட்டம், பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், விஷன் பார் விஸ்டம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து யோகமும், மனித மாண்பும் என்ற உடல் உயிர், மனம், அறிவு மற்றும் சமூக நலக்கல்வி கற்றுத்தரப்படுகிறது. இங்கு சான்றிதழ் கோர்ஸ், டிப்ளமோ, பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., எம்.ஃபில்., பி.எச்.டி., போன்ற கல்விபிரிவுகள் நடத்தப்படுகிறது.
இந்த படிப்புகளை இல்லத்தரசிகள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என 14 வயது முதல் 80 வயது வரை உள்ளவர்கள் படிக்கலாம். தற்போது மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யோகமும், மனித மாண்பும் தொடர்பான பட்டம், பட்டய, சான்றிதல் பயிற்சியில் சேர்ந்து கல்வி பயிலாம்.
மேலும் விபரங்களுக்கு 94874-86334 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
