UPDATED : ஜூலை 31, 2013 12:00 AM
ADDED : ஜூலை 31, 2013 02:32 PM
அப்படி பயணம் செய்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும், சரியான வானிலையில் விமானத்தை செலுத்துவதும் முக்கியம். இத்தகைய பாதுகாப்பு சம்பந்தமான செயல் முறைகளுக்கு உதவுவதற்கு தான், விமான பராமரிப்பு இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.
விமான பராமரிப்பு பொறியாளரின் முதல் பணி, பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் விமானம் சிறந்த முறையில் இருக்கிறதா என சோதனை செய்வது தான். தேவைப்பட்டால் தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்ய வேண்டும். விமானத்தை சிறப்பாக செலுத்துவதற்கு உதவ வேண்டும். தொடர்ச்சியான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது அவசியம்.
தகுதி
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
ஏ.எம்.இ., (ஏர்கிராப்ட் மெயின்டனென்ஸ் இன்ஜினியரிங் ) எனும் விமான பராமரிப்பு பொறியியல் படிப்பு, மூன்று ஆண்டுகள் பயிலக் கூடியது. சில கல்வி நிறுவனங்களில் கால அளவு, 4 ஆண்டுகளாக கூட இருக்கிறது. மாணவர்கள் டி.ஜி.சி.ஏ.,வால் (டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன்) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டும் தான் பயில வேண்டும்.
வேலைவாய்ப்பு
சிறந்த வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக, விமானப் பராமரிப்பு இன்ஜினியரிங் படிப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து தொழில் நிறுவனங்கள், அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், பல தனியார் நிறுவனங்களும் விமானப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருப்பதால், ஏவியேஷன் படிப்புகளுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.
ஊதியம் ஆரம்ப கட்டத்தில் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருக்கும். சில ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் பெறலாம்.
கல்வி நிறுவனங்கள்
* இந்துஸ்தான் ஏவியேஷன் அகாடமி (www.hindustanacademy.com)
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ், டில்லி (www.iiagroup.co.in)
* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்கல், கோல்கட்டா (www.iiaskolkata.org)
* பிளைடெக் ஏவியேஷன் அகாடமி, செகந்திராபாத் (www.flytechaviation.com)
* ஆல்பின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ், டேராடூன் (www.alpineddn.com)