தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காதுகேளாதோர் பயிற்சி மையம் திறப்பு

காதுகேளாதோர் பயிற்சி மையம் திறப்பு

காதுகேளாதோர் பயிற்சி மையம் திறப்பு


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 10:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 10:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஆரம்ப நிலை காதுகேளாதோர் பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆரம்ப கால செவித்திறன் குறையுடைய சிறுவர்களை கண்டறிவதற்கான, ஆரம்பநிலை காதுகேளாதோர் பயிற்சி மையம், 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு, பிறந்த குழந்தைகளுக்கு காது பரிசோதனையும், ஐந்து வயதிலான செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு ஆரம்பநிலை பயிற்சியும் அளிக்கப்படும். மேலும், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, தூய ஒலி செவிமானியுடன் பார்த்தல், பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சி பரிசோதனை, செவித்திறன் கருவி பொருத்துதல், ஆரம்பநிலை பயிற்சிகள், பேச்சு பயிற்சி மற்றும் பரிசோதனைகளும் செய்யப்படும்.

இப்பயிற்சி மையத்தை சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி திறந்து வைத்து 60 பயனாளிகளுக்கு 2.30 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அப்துல் ரஹீம், ஆட்சியர் வீர ராகவ ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us