UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 23, 2014 10:51 AM
காரைக்கால்: காரைக்காலில் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் அதிகாரி கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின்படி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் மாநில அளவிலும், நலச்சங்க அளவிலும் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை மதகடி தொழிலாளர் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
