UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM
ADDED : ஜூன் 23, 2014 10:53 AM
சென்னை: சென்னை அண்ணா பல்கலையில் இன்று துவங்கும் பி.இ. சேர்க்கைக்கான கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர 1.68 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான தரவரிசைப் பட்டியல் 16ம் தேதி வெளியானது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று அண்ணா பல்கலையில் துவங்குகிறது.
இன்றும், நாளையும் விளையாட்டுப் பிரிவுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்தப் பிரிவில் உள்ள 500 இடங்களுக்கும் ஒதுக்கீடு நடைபெறும். அதை தொடர்ந்து வரும் 25ம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27ம் தேதி துவங்கி ஜூலை 28ம் தேதி வரை நடக்கிறது.
பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சம் இடங்கள் வரை உள்ளதால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
