தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பணம், புகழ் சேர்க்கும் படிப்புகள்; தினமலர் திசைகாட்டி கருத்தரங்கில் தகவல்

பணம், புகழ் சேர்க்கும் படிப்புகள்; தினமலர் திசைகாட்டி கருத்தரங்கில் தகவல்

பணம், புகழ் சேர்க்கும் படிப்புகள்; தினமலர் திசைகாட்டி கருத்தரங்கில் தகவல்


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: தினமலர் மற்றும் மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி சார்பில் திசைகாட்டி என்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி போடியில் நடந்தது.

இதில், கல்லூரியின் அனிமேஷன் துறைத்தலைவர் திருநாவுக்கரசு பேசியதாவது: அனிமேஷன் துறையில் கல்வி கற்றவர்கள் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். ஹாலிவுட், அனிமேஷன் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள், தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இதனால் வேலைவய்ப்பு பெருகி வருகிறது. இதற்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் பிரமிக்கத்தக்க உள்கட்டமைப்புகள் உள்ளன.

தமிழகத்திலேயே இக்கல்லூரியில் மட்டுமே அனிமேஷன் படிப்பு ரெகுலர் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தனித்தனி கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு படித்த மாணவர்கள் சினிமா உட்பட எல்லா துறைகளிலும் பணிபுரிகின்றனர். இவ்வாறு பேசினார்.

சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு (எப்.டி.வி.பி.) துறைத்தலைவர் ராஜவர்த்தன் பேசியதாவது: சினிமா, டிவி நிகழ்ச்சி தயாரிப்பிற்கான முதல் பட்டப்படிப்பை (பி.எஸ்சி.) இக்கல்லூரி மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது. சினிமா, டிவி நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய முழு விவரமும் கற்றுத்தரப்படுகிறது. இதனால் எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். படைப்புத்திறன், மகிழ்ச்சி, பணம், புகழ், சேவை என எல்லாமே இந்த படிப்பில் கிடைக்கும். பெண்கள் இத்துறையில் கொடிகட்டி பறக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு பேசினார்.

மேரி டைம் ஹாஸ்பிடாலடி ஸ்டடீஸ் துறைத்தலைவர் கார்த்திலிங்கம் பேசியதாவது: மும்பைக்கு அடுத்து சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரியில் மட்டுமே இப்படிப்பு உள்ளது. இப்படிப்புக்கு உலகளவில் அதிக வரவேற்பு உள்ளது. இதுவரை இக்கல்லூரியில் 1,500 மாணவர்கள் படித்து முடித்துள்ளனர்; இவர்களில் 700 பேர் கப்பல்களிலும்; 800 பேர் உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். கப்பலில் பணி செய்தால் உலகம் சுற்றிக்கொண்டே சம்பாதிக்க முடியும். இதற்கு வருமான வரியும் கிடையாது. இவ்வாறு பேசினார்.

இந்திய பிலிம் டிவிஷன் சார்பில் மாணவர்களுக்கான குறும்படங்கள், அனிமேஷன் படங்கள் திரையிடப்பட்டன. அனிமேஷன், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு, மேரிடைம் ஹாஸ்பிடாலடி ஸ்டடீஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, நெட்ஒர்க்கிங், பி.காம்.,(பேங்கிங் அன்ட் இன்சூரன்ஸ்) துறைகள் குறித்து விளக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us