தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வெளிநாட்டு வளாகத்தை திறக்கிறது ஐ.ஐ.எம்., லக்னோ

வெளிநாட்டு வளாகத்தை திறக்கிறது ஐ.ஐ.எம்., லக்னோ

வெளிநாட்டு வளாகத்தை திறக்கிறது ஐ.ஐ.எம்., லக்னோ


UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM

ADDED : ஜூன் 23, 2014 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 23, 2014 12:00 AM ADDED : ஜூன் 23, 2014 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.எம்., லக்னோவும், வேறுசில இந்திய உயர்கல்வி நிறுவனங்களைப் போல், தனது வெளிநாட்டு வளாகத்தை விரைவில் திறக்கவுள்ளது.

இதுகுறித்து அக்கல்வி நிறுவன வட்டாரங்கள் கூறியதவாது: ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இடங்களில், எங்கள் வளாகத்திற்கான இடங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியில், நாங்கள் ஏற்கனவே, கணிசமான அளவில் அடிப்படை பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

எங்கள் கல்வி நிறுவன இயக்குநராக, டாக்டர்.சிங், கடந்த 2009ம் ஆண்டில் இரண்டாம் கட்ட பதவி காலத்தை(second tenure) தொடங்கினார். அப்போது, இந்தியா மட்டுமின்றி, உலகளாவிய அளவில் ஐ.ஐ.எம்., லக்னோ தனது செயல்பாட்டை விரிவாக்க வேண்டுமென்று விரும்பி, அவர் தனது முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன், இவரது பணிகாலம் நிறைவு பெறுகிறது. எனவே, விரைவில் அமையவுள்ள வெளிநாட்டு வளாகத்தை, அடுத்த இயக்குநர்தான் திறந்து வைப்பார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us