தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

மாணவர் விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இரண்டு கல்லூரி மாணவர் விடுதி, மூன்று கல்லூரி மாணவியர் விடுதி, ஒரு சட்டக்கல்லூரி மாணவர் விடுதி, 26 பள்ளி மாணவர் விடுதி, 10 பள்ளி மாணவியர் விடுதி, ஐந்து பழங்குடியின மாணவர் விடுதி, இரண்டு மாணவியர் விடுதி என, மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு, 2014 - 15ம் ஆண்டுக்கு, இவ்விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நிபந்தனைக்கு உட்பட்டு நடக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குடும்ப ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சொந்த இருப்பிடத்துக்கும், பள்ளி, கல்லூரிக்கும் இடையே, ஐந்து கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மாணவியருக்கு இந்த விதி பொருந்தாது.

தகுதியுடைய மாணவ மாணவியர், விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து, வரும், 15ம் தேதிக்குள், சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமே வழங்க வேண்டும். இந்த வாய்ப்பை மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us