தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆசிரியர் பற்றாக்குறையைக் கண்டித்து திருவள்ளுவர் அரசு பள்ளி மாணவிகள் திடீரென வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லப்போர்த் வீதியில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தாண்டு பிளஸ் 2 வகுப்பில் நான்கு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இயற்பியல், கணக்குப்பதிவியல், வர்த்தக கணக்கியல் உள்ளிட்ட நான்கு பாடங்களுக்கு ஆசிரியர் இல்லாததால் மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் எடுத்துக்கூறியும், ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பள்ளி துவங்கியவுடன், பிளஸ் 2 மாணவிகள் வகுப்பைப் புறக்கணித்து விட்டு, பள்ளி எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கல்வித்துறை இணை இயக்குனர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர் பற்றாக்குறையால் எங்களது பாடம் பாதிக்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால், எங்களது படிப்பு கேள்விக்குறியாகி விடும். எனவே உடனடியாக ஆசிரியர்கள் இல்லாத பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக கல்வித்துறை இணை இயக்குனர் உறுதியளித்தார். இதையேற்று மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us