முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசுகள் வழங்கல்!
முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசுகள் வழங்கல்!
UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 01:01 PM
சென்னை: தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற, 42 மாணவ, மாணவியருக்கு, 11.07 லட்சம் ரூபாய், ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தில், 2013 - 14ம் கல்வியாண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில், 42 பேர், முதலிடம்; 184 பேர், இரண்டாமிடம்; 382 பேர் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதுடன், அவர்களின் மேற்படிப்புகளுக்கான செலவையும், தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது.
நேற்று, 10ம் வகுப்பு தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்த, 28 பேருக்கு, 6.15 லட்சம் ரூபாய்; பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற, 14 பேருக்கு, 4.92 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள், தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டன.
