பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
UPDATED : ஜூலை 18, 2014 12:00 AM
ADDED : ஜூலை 18, 2014 12:04 PM
அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட தாம்ராஸ் (கவுண்டம்பாளையம் கிளை), ஜனகல்யாண், பரசுராம வித்யார்த்தி சேவா டிரஸ்ட் ஆகிய அமைப்புகள் சார்பில், பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகம் வழங்கும் விழா, கவுண்டம்பாளையம், சாய் லட்சுமி ஹாலில் நடந்தது.
விழாவில், தாம்ராஸ் மாவட்ட பொருளாளர் சங்கர் வரவேற்றார். ஜனகல்யாண் மாவட்ட தலைவர் விஜயன் தலைமை வகித்தார். கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட ஜனகல்யாண் மாநில தலைவர் பாலசுப்ரமணியம், ஸ்ரீராம் டிரேட் பைனான்ஸ் குரூப் நிர்வாகி சிவசிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
