245 துவக்க பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கான தமிழ் பயிற்சி
245 துவக்க பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கான தமிழ் பயிற்சி
UPDATED : ஆக 08, 2014 12:00 AM
ADDED : ஆக 08, 2014 11:47 AM
அ நிறம் | அளவு
ராஜபாளையம்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ராஜபாளையம் வட்டாரத்தில் உள்ள 245 துவக்க பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கான தமிழ் பயிற்சி இருநாட்கள் நடந்தது.
தமிழ் படித்தல், எழுதுதல், திறன்வளர்த்தல் தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. கேட்டல், பேசுதல் திறன்களோடு துவக்கப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு, எழுத்துக்களின் வரிவடிவம், உச்சரிப்பு, குறில், நெடில் வேறுபாடு, வல்லின மற்றும் மெல்லின வேறுபாடு, குரல் பயிற்சி, எழுத்து பயிற்சி அளிப்பது குறித்து விளக்கப்பட்டது. அதனை கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பால்ராஜ் துவக்கி வைத்தார்.
