தினமலர் செய்தியால் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
தினமலர் செய்தியால் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
UPDATED : ஆக 08, 2014 12:00 AM
ADDED : ஆக 08, 2014 12:48 PM
அ நிறம் | அளவு
நந்திமேடு: தினமலர் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால், நந்திமேட்டில் ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நந்திமேட்டில் அங்கன்வாடி மையத்திற்காக, கடந்த 2013 - 14ம் நிதியாண்டில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
பணிகள் முடிந்தும், புதிய கட்டடம் திறக்கப்படாததால், சிதிலமடைந்த பள்ளி கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று, புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து வைத்து, குழந்தைகளை புதிய கட்டடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
