தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"பாவேந்தர் பாரதிதாசனின் 125வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை"

"பாவேந்தர் பாரதிதாசனின் 125வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை"

"பாவேந்தர் பாரதிதாசனின் 125வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை"


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: "அடுத்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனின், 125வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துக்குமார் தெரிவித்தார்.

பாரதிதாசன் பல்கலைகழக பதிப்புத்துறை சார்பில், "பாரதிதாசன் படைப்புகளில் பெண்ணியம்" என்ற தலைப்பில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கம், பல்கலை வளாகத்தில் நடந்தது.

கருத்தரங்கை துவக்கி வைத்து, துணைவேந்தர் முத்துக்குமார் பேசியதாவது: துணைவேந்தர் என்பது பதவி இல்லை. அது ஒரு பொறுப்பு. பதவி என்றால் அதில் வில்லங்கம் இருக்கிறது. பொறுப்பு இருந்தால்தான், கடமைகளை நிறைவேற்ற முடியும். என்னுடைய கடமையை நிறைவேற்ற வாய்ப்பு வழங்கிய தமிழக கவர்னர் ரோசையா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அடுத்த ஆண்டு பாவேந்தர் பாரதிதாசனின், 125வது ஆண்டு விழாவை, சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும்.

நட்பை விட தலைசிறந்த சொத்து எதுவும் இல்லை. அதனால், பாரதிதாசன் எழுதி தடை செய்யப்பட்ட கவிதை தொகுப்பு, நமக்கு மீண்டும் கிடைத்துள்ளது. இதை அனைவருக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறை சார்பில், 70க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேறிய நாடு, எப்போதும் வளர்ச்சி பாதையில் செல்லும். குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் கருவியாக, பெண்கள் இருந்த காலம் மலையேறி விட்டது. பெண்களுக்கு வரதட்சனை கொடுத்து, திருமணம் செய்து கொள்ளும் காலம் வந்து விட்டது. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களில், இது நடைமுறையில் உள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்காக, தமிழகத்தில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதை பெண்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன், பேரன் பாரதி, பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்புத்துறை தலைவர் முருகேஸ்வரி, ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செல்வநாயகம், ஊராய்வு மைய இயக்குனர் கோவிந்தராஜன், உருமு தனலட்சுமி கல்லூரி தமிழ்த்துறை உதவி போராசிரியர் விஜயசுந்தரி உள்பட பலர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us