தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இருபாலர் கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு

அரசு இருபாலர் கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு

அரசு இருபாலர் கல்லூரியில் நான்காம் கட்ட கலந்தாய்வு


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 12:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 12:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், அரசு இருபாலர் கல்லூரியில், நான்காம் கட்ட கலந்தாய்வு வரும் 18ம் தேதி நடக்கிறது.

சேலம், செரிரோடு, அரசு இருபாலர் கல்லூரி (தன்னாட்சி)யில், முதல் மூன்று கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், ஆகஸ்ட் 18ம் தேதி, நான்காம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அரசு கல்லூரிகளில், இம்மாத இறுதிக்குள் மாணவ, மாணவியருக்கான இறுதி கட்ட சேர்க்கை முடித்து, முதல் பருவத்துக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் துவங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கலை அறிவியல், மொழிப்பாடம் மற்றும் தொழிற்பாட பிரிவுகளுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு ஆக., 18ம் தேதி கலந்தாய்வு துவங்கவுள்ளது. மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண், 419 முதல் 397 வரையும், பெண்களுக்கு 468-437 வரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

கலைப்பிரிவு மாணவர்களுக்கு ஆக., 19ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்களுக்கு 468 முதல் 437 வரை கட்-ஆஃப் மதிப்பெண்களும், மாணவிகளுக்கு 379 முதல் 281 வரையும் கட்-ஆஃப் மதிப்பெண்களும், தமிழ், ஆங்கிலம் மற்றும் தொழிற்பாடப்பிரிவில் மாணவர்களுக்கு ஆக., 19ம் தேதியும் நடக்கவுள்ளது. அனைத்து விதமான பாடத்துக்கும் காலை, 10 மணி முதல் சேர்க்கை துவங்கவுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம், தொழிற்பிரிவு பாடத்துக்கான இடங்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால், மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என அரசு கலைக்கல்லூரி (தன்னாச்சி) முதல்வர் தனலட்சுமி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us