UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 12:09 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: நேரு யுவகேந்திரா சார்பில் மகளிருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மையங்கள் மயிலம் மற்றும் வானூர் ஒன்றியத்தில் துவங்கப்பட்டுள்ளது.
மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மகளிருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி மையம் துவக்க விழா வீடூரில் நடந்தது. பெண்கள் கல்வி மற்றும் மேம்பாட்டு சங்க பயிற்சி மையத்தில் 30 பெண்களுக்கான, 3 மாதப் தையல் பயிற்சியை, நேரு யுவக்கேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி துவக்கி வைத்தார்.
அடிப்படை தையல் பயிற்சி மற்றும் பல்வேறு உடைகள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. சங்க தலைவர் ஞானதேசிகன், செயலாளர் சகாயமரி உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறுவை கிராமத்திலும் 2 மாதத்திற்கான கம்ப்யூட்டர் பயிற்சி மையம் துவங்கினர்.
