அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் குளம்
அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் குளம்
UPDATED : ஆக 14, 2014 12:00 AM
ADDED : ஆக 14, 2014 12:21 PM
அ நிறம் | அளவு
முருக்கேரி: திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப்பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி நுழைவு வாயில் முன், விளையாட்டு திடல் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் விளையாட்டு திடலில் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் காலையில் பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீரில் நின்றபடி நாட்டுபண் பாடினர். பின்பு அந்த தண்ணீரிலேயே விளையாடினர். மைதானத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
