தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாம்பியன் பட்டம் வென்ற புதுவலசை, மண்டபம் முகாம் பள்ளிகள்!

சாம்பியன் பட்டம் வென்ற புதுவலசை, மண்டபம் முகாம் பள்ளிகள்!

சாம்பியன் பட்டம் வென்ற புதுவலசை, மண்டபம் முகாம் பள்ளிகள்!


UPDATED : ஆக 14, 2014 12:00 AM

ADDED : ஆக 14, 2014 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2014 12:00 AM ADDED : ஆக 14, 2014 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வட்டார பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகளில் புதுவலசை, மண்டபம் முகாம் பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

ராமநாதபுரத்தில் நடந்த இப்போட்டிகளில் 14 வயதினருக்கான 400 மீ., ஓட்டத்தில் புதுவலசை அரபு ஒலியுல்லா மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா; இதே பள்ளியின் சுஸ்மிதா 17 வயதினருக்கான 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். இதே பிரிவில், குண்டு எறிதலில் ராமேஸ்வரம் கிங் ஆப் கிங் உயர்நிலைப்பள்ளி எரோனியா முதலிடம் பிடித்தார்.

19 வயதினருக்கான 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி லகன்யா, குண்டு எறிதலில் ராமேஸ்வரம் ஸ்ரீபர்வவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பவித்ர லட்சுமி; வட்டு எறிதலில் தங்கச்சிமடம் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரெஸ்மிதா மாரி; மும்முறை தாண்டல், 400 மீ., 1,500 மீ., ஓட்டத்தில் வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வசந்தி; 800 மீ., ஓட்டத்தில் கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பொன்னீஸ்வரி; உயரம் தாண்டுதலில் பனைக்குளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வினிதா முதலிடம் பிடித்தனர்.

14, 17 வயது பிரிவுகளில் புதுவலசை அரபு ஒலியுல்லா மேல்நிலைப்பள்ளி; 19 வயது பிரிவில் மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி சாம்பின் பட்டம் வென்றன. வென்ற மாணவிகளுக்கு பனைக்குளம் பகுர்தீன் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் டேனியல் பரிசு வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us