கல்வி உதவித்தொகை கிடைக்காததால் ஐ.டி.ஐ., முதல்வர், ஆசிரியர்கள் ராஜினாமா
கல்வி உதவித்தொகை கிடைக்காததால் ஐ.டி.ஐ., முதல்வர், ஆசிரியர்கள் ராஜினாமா
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 12:58 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில், தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச் செயலாளர் கருப்பையா கூறியதாவது: தமிழ்நாடு இறையியல் கல்லுாரி கட்டுப்பாட்டில் உய்ப்பா ஐ.டி.ஐ., உள்ளது.
தற்போது, பயிற்சிபெறும் 110 மாணவர்களில் 35 பேர், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏழு ஆண்டுகளாக இவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லாததால் ஐ.டி.ஐ., முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றார்.
