தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்


UPDATED : ஆக 23, 2014 12:00 AM

ADDED : ஆக 23, 2014 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2014 12:00 AM ADDED : ஆக 23, 2014 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தரப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவிலில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பேசியதாவது: கோவில் சொத்துகளையும், ஆதீன சொத்துகளையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் பணம் செலுத்தாமல் இருப்பது சரியல்ல. தமிழக மீனவர்கள் பிரச்னையை யார் நினைத்தாலும் அவரது உள்ளம் அழுதுவிடும்.

புதுக்கோட்டை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றால் திரும்பி வருவரா? என்ற நிலை காணப்படுகிறது. மோடி பிரதமர் ஆன பின், மீனவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழர்களின் சரிவை மோடி ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்.

மீனவர் பிரச்னைக்கு விரைவில் சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த காலங்களில் போராட்டம் நடத்தினோம். தற்போது பா.ஜ. அரசு அமைந்துள்ளது. நிச்சயமாக எல்லா ஏழை இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us