தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை: யு.பி.எஸ்.சி.

ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை: யு.பி.எஸ்.சி.

ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை: யு.பி.எஸ்.சி.


UPDATED : ஆக 23, 2014 12:00 AM

ADDED : ஆக 23, 2014 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2014 12:00 AM ADDED : ஆக 23, 2014 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஆகஸ்ட் 24ம் தேதி நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க தேவையில்லை என மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு தொடர்பாக சிவில் சர்வீஸ் தேர்வு விதிமுறைகளில் சில சட்ட திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி தேர்வர்களுக்கு அறிவிக்கப்படும் புதிய அறிவிப்பு வருமாறு: 24.8.14ல் முதல் மற்றும் இரண்டாம் தாள் என சிவில் தேர்வு முதல்நிலை தேர்வு நடக்கும்.

இரண்டாம் தாள் தேர்வு கேள்வித்தாளில் 10ம் வகுப்பு தரத்தில் இடம் பெற்றுள்ள ஆங்கில திறனறிதல் கேள்விகளுக்கு தேர்வர்கள் பதிலளிக்க வேண்டாம். இந்த கேள்விகள் கிரேடு மற்றும் மெரிட் பட்டியலுக்காக மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.

எனவே தேர்வர்கள், ஆங்கில கேள்விகளை தொட தேவையில்லை. மேலும் ஆங்கில கேள்விகளை, இந்தி வழி கேள்வித்தாளில் அச்சடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மொத்த மதிப்பெண்ணில் ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் கழிக்கப்படும்.

எனவே பிரதான தேர்வுக்கு (மெயின்) தகுதியான தேர்வர்களை தேர்வு செய்யும்போது, முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளில் ஆங்கில கேள்விகளுக்கான மதிப்பெண் போக, மீதியுள்ள மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us