பள்ளிகளில் விளையாட்டிற்கு முக்கியத்துவம்: ஒலிம்பிக் வீராங்கனை ஷைனிவில்சன்
பள்ளிகளில் விளையாட்டிற்கு முக்கியத்துவம்: ஒலிம்பிக் வீராங்கனை ஷைனிவில்சன்
UPDATED : ஆக 23, 2014 12:00 AM
ADDED : ஆக 23, 2014 11:07 AM
நாகர்கோவில்: விளையாட்டுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று ஒலிம்பிக் வீராங்கனை ஷைனிவில்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவிலில் அப்போன்சா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: விளையாட்டுகளில் சிறுவயதிலிருந்தே எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. 8, 9-ம் வகுப்புகளில் படிக்கும் போது பள்ளியில் பல மணி நேரம் விளையாட்டு பயற்சி மேற்கொள்வேன்.
பள்ளி நிர்வாகமும் என்னை உற்சாகப்படுத்தியது. அதனால்தான் பின்னாளில் ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் என்னால் சாதிக்க முடிந்தது. தமிழகத்தை பொறுத்த வரை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி மாநில அரசு பரிசுகள் வழங்கி கவுரவிப்பது பாராட்டுக்குரியது. இது விளையாட்டு வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும். விளையாட்டு வீரர்கள் உருவாக முக்கிய பங்கு வகிப்பது பள்ளிகள்தான்.
சிறுவயதிலேயே அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தினால், பின்னாளில் அவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள். எனவே பள்ளிகள், படிப்பை போல, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
