தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநாடு
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாநாடு
UPDATED : செப் 03, 2014 12:00 AM
ADDED : செப் 03, 2014 10:31 AM
அ நிறம் | அளவு
உச்சிப்புளி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மண்டபம் வட்ட கிளை மாநாடு உச்சிப்புளியில் நடந்தது. வட்டார தலைவர் மல்லிகா தலைமை வகித்தார்.
வட்டார செயலாளர் தமிழரசி வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர். குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொது மைய பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உணவூட்டு செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட ஒன்பது கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
