தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் அதிரடி இடமாற்றம்

அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் அதிரடி இடமாற்றம்

அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் அதிரடி இடமாற்றம்


UPDATED : செப் 03, 2014 12:00 AM

ADDED : செப் 03, 2014 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2014 12:00 AM ADDED : செப் 03, 2014 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் 6 அரசு கலை கல்லுாரிகள், காரைக்காலில் இரண்டு, மாகி மற்றும் ஏனாமில் தலா ஒரு அரசு கலைக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லுாரிகளின் முதல்வர்களை, இடமாற்றம் செய்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தாகூர் கல்லுாரி முதல்வர் தமிழரசி தமிழ்மணி, லாஸ்பேட்டை காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் இயக்குநராகவும், மாகி மகாத்மா காந்தி கல்லுாரி முதல்வர் ராமசாமி, காரைக்கால் அண்ணா கல்லுாரி முதல்வராகவும், காரைக்கால் அண்ணா கல்லுாரி முதல்வராக இருந்த சசிகாந்ததாஸ், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரி முதல்வராகவும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏனாம் ராதாகிருஷ்ணன் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பிச்சுமணி, லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லுாரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, தற்போது காரைக்கால் அவ்வையார் மகளிர் கல்லுாரி, மாகி மகாத்மா காந்தி அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் ஏனாம் ராதாகிருஷ்ணன் கலை அறிவியல் கல்லுாரிகளில், காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்ப கோப்பு தயாராகியுள்ளது. ஓரிரு வாரத்தில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us