தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பூப்பந்து போட்டியில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி

பூப்பந்து போட்டியில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி

பூப்பந்து போட்டியில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி


UPDATED : செப் 03, 2014 12:00 AM

ADDED : செப் 03, 2014 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2014 12:00 AM ADDED : செப் 03, 2014 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை மண்டல அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான பூப்பந்து போட்டியில் கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வெற்றி பெற்றது.

வட்டமலைப்பாளையம் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் சார்பில் கோவை மண்டல அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கான பூப்பந்து போட்டி கல்லுாரியில் துவங்கியது. 11 கல்லுாரிகள் போட்டியில் பங்கேற்றன. முதல் சுற்று முதல் போட்டியில், பழனி பி.ஏ., கல்லுாரி 29-14, 29-17 புள்ளி கணக்கில் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியையும்; 2வது போட்டியில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லுாரி 29-27, 29-17 புள்ளி கணக்கில் நஞ்சப்பா இன்ஸ்டிடியூட் பாலிடெக்னிக் கல்லுாரியையும்; 3வது போட்டியில், உடுமலை ருத்ரவேணி கல்லுாரி 29-20, 22-29, 29-24 புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன.

முதல் காலிறுதியில், பழனி பி.ஏ., கல்லுாரி 13-29, 29-28, 29-28 புள்ளி கணக்கில் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியையும்; 2வது போட்டியில், ஜி.ஆர்.ஜி., கல்லுாரி 29-21, 29-9 புள்ளி கணக்கில் எஸ்.ஆர்.எம்.வி., கல்லுாரியையும்; 3வது போட்டியில், கோவை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி 29-8, 29-11 புள்ளி கணக்கில் ருத்ரவேணி கல்லுாரியையும்; 4வது போட்டியில், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி 29-17, 29-11 புள்ளி கணக்கில் நஞ்சயலிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியையும் வென்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us