சின்னையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குருவட்டார விளையாட்டு போட்டிகள்
சின்னையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குருவட்டார விளையாட்டு போட்டிகள்
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:47 AM
சிவகாசி: மேலக்கோட்டை சின்னையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், குருவட்டார விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் விளையாடினர். போட்டியில் திருத்தங்கல் சுந்தரவேல் மெட்ரிக்., பள்ளி, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் , 19வயது உட்பட்ட மாணவியருக்கான எறிபந்து போட்டியில் முதலிடம், 19வயது மாணவர்களுக்கான பூ பந்து போட்டியில் முதலிடம் பெற்றனர்.
14வயதுக்கு உட்பட்ட மாணவர், மாணவியருக்கான வாலிபால் போட்டியில் 2வது இடம், தடகள போட்டியில் 14வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வட்டு எறிதலில் பாலகோபலன் முதலிடம் பெற்றார். குண்டு எறிதலில் கேதிராஜ் 2ம் இடம் பெற்றார். 17வயது உட்பட்ட மாணவர் பிரிவில் நீளம் தாண்டுதலில் மணிகண்டன் முதலிடம், ஈட்டி எறிதலில் பிரவீன் 2ம் இடம், குண்டு எறிதலில் பிரசன்னா மூன்றாம் இடம் பெற்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றனர்.
19வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவு ஈட்டி எறிதலில் கோபிநாத் 2ம் இடம், வட்டு எறிதலில் பரணிதரன் 3ம் இடம், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 3ம் இடம் பெற்றனர்.
14வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் குண்டு எறிதலில் சாருமதி 3ம் இடம், 19வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் ஈட்டி எறிதல் லலிதா முதலிடம், குண்டு எறிதலில் சிவநாராயினி முதலிடம், வட்டு எறிதலில் ஆஷ்லின் ஜோஷ்னா 2வது இடம், மரியம் நர்கீஸ் பர்வீன் வட்டு எறிதலில் முதலிடமும், நீளம் தாண்டுதல், 100 மீ.ஓட்டத்தில் 2ம் இடம் பெற்றார். 200 மீ.ஓட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றார்.
ஆசிரியர்களுக்கான டென்னிகாய்ட் ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில், இப்பள்ளி ஆசிரியர்கள் அணி முதலிடம் பெற்றது. குறுவட்ட போட்டியில், சுந்தரவேல் மெட்ரிக்., பள்ளி அதிக புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் ஆஷா ஸ்ரீராம் அசோக், முதல்வர் செல்வகுமாரி, உடற்கல்வி இயக்குனர் நாராயண மூர்த்தி பாராட்டினர்.
