பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா
பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:56 AM
அ நிறம் | அளவு
சென்னை: தினமலர் வாசகர்களுக்கான, பொது அறிவு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா, கோலாகலமாக நடந்தது.
தினமலர் நாளிதழும், காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் சில்க்ஸும் இணைந்து, தினமலர் வாசகர்களின் பொது அறிவை சோதிக்கும் விதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக, அறிவு விளையாடும் ஆடி விளையாட்டு என்ற பெயரில், பொது அறிவு போட்டியை நடத்தி வருகிறது.
அதில் வெற்றிபெறும் வாசகர்களுக்கு, பட்டுப்புடவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டிகள், தொடர்ந்து நான்கு வாரங்கள் நடந்தன. ஒவ்வொரு வாரமும், 100 வாசகர்கள் வீதம், 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
