மழை காலத்தில் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கை: தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு
மழை காலத்தில் மாணவர் பாதுகாப்பு நடவடிக்கை: தொடக்க கல்வி இயக்குநரகம் உத்தரவு
UPDATED : அக் 26, 2014 12:00 AM
ADDED : அக் 26, 2014 10:55 AM
தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில், பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கக் கூடாது. தேங்கும் நீரை, மின் மோட்டார் மூலம், உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் உள்ளிட்ட, நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளை நேரங்களில், மாணவர் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தில், மின் கசிவு ஏற்படாத வகையில், மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த மின் சாதனங்களை, மாணவர்கள் தொடாதவாறு, ஆசிரியர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

