அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க நவ.,7 வரை காலக்கொடு நீட்டிப்பு
அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பிக்க நவ.,7 வரை காலக்கொடு நீட்டிப்பு
UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 12:13 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காலியாக உள்ள 478 அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவ.,7 வரை காலக்கொடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ஒன்றியத்தில் 17, பரமக்குடியில் 29, மண்டபத்தில் 27, திருப்புல்லாணியில் 21, கடலாடியில் 23, முதுகுளத்தூரில் 17, கமுதியில் 22, ஆர்.எஸ்.மங்கலத்தில் 35, போகலூரில் 19, திருவாடானையில் 33, நயினார்கோவில் ஒன்றியத்தில் 15 என 258 அங்கன்வாடி மைய முதன்மை பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
ராமநாதபுரம் ஒன்றியத்தில் 16, பரமக்குடியில் 23, மண்டபத்தில் 23, திருப்புல்லாணியில் 26, கடலாடியில் 16, முதுகுளத்தூரில் 13, ஆர்.எஸ்.மங்கலத்தில் 20, போகலூரில் 10, திருவாடானையில் 20, நயினார்கோவில் ஒன்றியத்தில் 11 என 148 அங்கன்வாடி மைய உதவியாளர்கள் பணியிடங்கள், கடலாடி ஒன்றியத்தில் 9, கமுதியில் 24, ராமநாதபுரம், திருவாடானை, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியங்களில் தலா ஒரு குறு அங்கன்வாடி பணியாளர் இடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து அக்., 21முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக சிறப்பு கவுன்டரில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க நாளை(நவ.,5) இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று(நவ.,4) முகரம் விடுமுறை தினம் என்பதால், நவ., 7 வரை காலக்கெடுவை நீட்டிப்பு செய்து கலெக்டர் நந்தக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

