தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் கோவை மாவட்ட மாணவர்கள் சாதனை

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் கோவை மாவட்ட மாணவர்கள் சாதனை

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில் கோவை மாவட்ட மாணவர்கள் சாதனை


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 11:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 11:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில், கோவை மாவட்ட மாணவ, மாணவியர் சாதித்துள்ளனர்.

சேலத்தில், மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, கடந்த 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஆர்.கே.,ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலைய மாணவன் முகமது நவ்பீத், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம், நாகவிஷ்ணு ஒரு வெண்கலம், எல்ஜி., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியின் கோகுல கிருஷ்ணன், வெங்கடேஷ் ஆகியோர் தலா ஒரு வெண்கலம், பாரதி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியின் அரவிந்த் ஒரு வெண்கலம் வென்றனர். இப்பிரிவில், முகமது நவ்பீத், தனி நபர் சாம்பியனில் மூன்றாவது இடம் பிடித்தார்.

மாணவியர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் ஹரிணி ஒரு வெண்கலம் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் நிஷாந்த், இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, பாரதிய வித்யா பவன் பள்ளியின் ஜெய்ஹிந்த் ராஜ் ஆகியோர் பதக்கம் பெற்றனர். நிஷாந்த், தனிநபர் சாம்பியனில் இரண்டாவது இடம் பிடித்தார். மாணவியர் பிரிவில், சி.எஸ்.ஐ., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியின் ஷிபானா, இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி வென்றார்.

19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், எல்ஜி., மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியின் ஆனந்த கிருஷ்ணன், நவனீத கிருஷ்ணன், எட்பர்க், நவீன் குமார், ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலைய மாணவன் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர். மாணவியர் பிரிவில், செயின்ட் ஜோசப்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியின் ஆக்னஸ் ஜூடியத், ஒரு தங்கம், ஒரு வெண்கலம், விமல்ஜோதி கான்வென்ட் பள்ளியின் ரோஹினி, ஒரு தங்கம், மூன்று வெண்கலம் வென்றனர்.

ஒட்டுமொத்த சாம்பியன் பிரிவில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் மற்றும் மாணவியர் அணி மூன்றாவது இடம், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் அணி இரண்டாவது இடம், மாணவியர் அணி முதலிடம் பிடித்து சாதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us