UPDATED : டிச 23, 2014 12:00 AM
ADDED : டிச 23, 2014 11:24 AM
அ நிறம் | அளவு
கோவை: மாநில அளவிலான வாலிபால் போட்டிக்கான கோவை மாவட்ட அணி, தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், டிச., 27 முதல் 30 வரை, மாநில அளவிலான வாலிபால் போட்டி, சேலம் சி.எஸ்.ஐ., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது. இதற்காக, கோவை மாவட்ட அணிகள் தேர்வு, 20ம் தேதி நடந்தது.
கோவை மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட கல்லுாரி மற்றும் பல்கலையில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் சுரேந்திரன், சண்முகவேல் பயிற்சியளிக்க உள்ளனர். நேரு விளையாட்டு மைதானத்தில், நேற்று முதல் பயிற்சி துவங்கியது.
