தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாக மகளிர் கல்லுாரி மீது ஏழை மாணவியர் புகார்

கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாக மகளிர் கல்லுாரி மீது ஏழை மாணவியர் புகார்

கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாக மகளிர் கல்லுாரி மீது ஏழை மாணவியர் புகார்


UPDATED : பிப் 10, 2015 12:00 AM

ADDED : பிப் 10, 2015 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 10, 2015 12:00 AM ADDED : பிப் 10, 2015 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: நட்சத்திர கலைவிழா என்ற பெயரில் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாக, கோவை பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி மீது, ஏழை மாணவியர் புகார் தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, கட்டணங்கள் தவிர்த்து மாணவியரிடம் எக்காரணம் கொண்டும், கல்லுாரிகள் பணம் வசூலிக்கக் கூடாது. இதனால் கலை நிகழ்ச்சிகள், சேவை நிதி போன்ற வேறு பெயர்களில், பணம் வசூலிக்கப்படுவதாக, தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பெரும்பாலான கல்லுாரிகள், குடியரசு தினவிழா, சுதந்திர தினம் போன்ற தேசப்பற்று சார்ந்த தினங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை.

தீண்டாமை ஒழிப்பு தினம், உலக தண்ணீர் தினம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம், தியாகிகள் தினம் உள்ளிட்ட நாட்களில், ஒருசில கல்லுாரிகள் மட்டுமே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. ஆனால், வர்த்தக ரீதியாக தங்கள் கல்லுாரிகளை விளம்பரப்படுத்தும் நோக்கில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளை நடத்த, மாணவியர், ஆசிரியர்களிடம் கட்டாய வசூல் செய்வது மட்டுமின்றி, இதற்கான, டிக்கெட்டுகளை விற்றுக்கொடுக்கவும் கட்டாயப்படுத்துகின்றனர்.

அவிநாசி ரோட்டில் உள்ள, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில், தில், தில், தில், பொன்னியின் செல்வன், கரிஷ்மா உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த மாணவிகளிடம் இருந்து 2000 ரூபாய் வசூலித்ததாகவும், 3௦ ஆயிரம் ரூபாய் வரை, வெளிநபர்களிடம் வசூலிக்க கட்டாயப்படுத்தியதாகவும் மாணவியர் புலம்புகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியர் சிலர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும், கலை நிகழ்ச்சி, கட்டட நிதி போன்ற ஏதாவது காரணங்களை கூறி, ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். கல்லுாரியில் அரங்கம் கட்ட, டிக்கெட் விற்பனைக்கு சென்ற இடங்களில், அவமானங்களை சந்திக்க நேரிட்டது. அடிக்கடி நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் கேட்டால் எங்களை போன்ற நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவியர், எங்கே போவோம்? போலீசில் புகார் செய்ததற்கு, முன்னாள் மாணவர்கள் நிதி அளித்ததாக கூறி சமாளித்து விட்டனர். இப்பிரச்னையில் இருந்து, எங்களை காப்பாற்ற வேண்டும்" என்றனர்.

கல்லுாரி முதல்வர் யசோதாவிடம் கேட்டதற்கு, "இது தவறான புகார். டிக்கெட்டுகள் வாங்கவும், விற்கவும் மாணவிகளை கட்டாயப்படுத்தவில்லை. நல்ல நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்தது" என்றார்.

குழு ஆய்வு நடத்தும்

பாரதியார் பல்கலை பதிவாளர் மனோகரன் கூறுகையில், "இதுகுறித்த புகார், பல்கலை துணைவேந்தருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஒப்புதலின் பேரில், ஒரு குழு நேரடியாக ஆய்வு செய்யும். புகார் உண்மை என்பது உறுதியானால், நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us