தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எத்திராஜ் மகளிர் கல்லுாரி விளையாட்டு தினக் கொண்டாட்டம்

எத்திராஜ் மகளிர் கல்லுாரி விளையாட்டு தினக் கொண்டாட்டம்

எத்திராஜ் மகளிர் கல்லுாரி விளையாட்டு தினக் கொண்டாட்டம்


UPDATED : பிப் 21, 2015 12:00 AM

ADDED : பிப் 21, 2015 11:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 21, 2015 12:00 AM ADDED : பிப் 21, 2015 11:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: எத்திராஜ் மகளிர் கல்லுாரி விளையாட்டு தின 100 மீ., ஓட்டப் பந்தயங்களில், வினோதினி, விஜயமாலினி இருவரும் முதலிடம் பிடித்தனர்.

எத்திராஜ் மகளிர் கல்லுாரி, விளையாட்டு தினம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. அதில், அந்த கல்லுாரியை சேர்ந்த மாணவியருக்கான, துறைரீதியாக போட்டிகள் நடந்தன. அதில், எய்டெட் பிரிவு மாணவியருக்கான, 100 மீ., ஓட்டப் பந்தயத்தில், வினோதினி, பந்தய துாரத்தை, 12:20 வினாடிகளில் கடந்து, முதலிடத்தை பிடித்தார். தனலட்சுமி, இரண்டாம் இடத்தையும், வர்ஷா, மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

மேனேஜ்மென்ட் மாணவியருக்கான, 100 மீ., ஓட்டப் பந்தயத்தில் விஜயலட்சுமி, பந்தய துாரத்தை, 12:60 வினாடிகளில் கடந்து, முதலிடத்தை வென்றார். சாந்தினி, இரண்டாம் இடத்தை பிடித்தார். அபிநயா மூன்றாம் இடத்தை தனதாக்கினார். அதேபோல், 4 x 100 மீ., தொடர் ஓட்டத்தில் அஞ்சுகம், ருக்மணி, வினோதினி, மதுமதி ஆகிய நால்வரும் முதலிடம் பிடித்தனர். முதல் இரண்டு இடங்களை பிடித்தோருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மூன்றாம் இடம் பிடித்த மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எத்திராஜ் மகளிர் கல்லுாரி சார்பில், இந்த கல்வி ஆண்டில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி களில், வெற்றி பெற்றோருக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us