விவசாய கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்
விவசாய கல்லுாரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்
UPDATED : பிப் 21, 2015 12:00 AM
ADDED : பிப் 21, 2015 11:18 AM
விவசாய கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மதுரை விவசாய கல்லுாரியில் நடக்கின்றன.
விளையாட்டு குழுமத் தலைவர் மகிமைராஜா போட்டிகளை துவக்கி வைத்தார். விவசாய, மனையியல் கல்லுாரி டீன்கள் சின்னுசாமி, புஷ்பா பங்கேற்றனர். 27 கல்லுாரிகளை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் பிப்.22 வரை நடக்கின்றன.
போட்டி முடிவுகள்
போட்டி - முதலிடம் - இரண்டாமிடம்
ஆடவர் செஸ் - கலவை ஏ.பி.ஏ.சி. கல்லுாரி - பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி
மகளிர் செஸ் - தஞ்சாவூர் ஐ.ஐ.சி.பி.டி. கல்லுாரி - மதுரை விவசாய கல்லுாரி.
ஆடவர் கூடைபந்து - கோவை விவசாய கல்லுாரி குமுளூர் விவசாய பொறியியல் கல்லுாரி.
மகளிர் கூடைபந்து - மதுரை விவசாய கல்லுாரி - பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி
ஆடவர் டேபிள் டென்னிஸ் - மதுரை விவசாய கல்லுாரி கலவை ஏ.பி.ஏ.சி. கல்லுாரி.
மகளிர் டேபிள் டென்னிஸ் - காரைக்கால் பஜன்கோவா கல்லுாரி - மதுரை விவசாய கல்லுாரி.
