“சங்க இலக்கியங்களை உணர்வுப்பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுகி ஆராய வேண்டும்”
“சங்க இலக்கியங்களை உணர்வுப்பூர்வமாக அணுகாமல் அறிவு பூர்வமாக அணுகி ஆராய வேண்டும்”
UPDATED : பிப் 27, 2015 12:00 AM
ADDED : பிப் 27, 2015 11:42 AM
காந்திகிராமம்:“சங்க இலக்கியங்களை உணர்வுப் பூர்வமாக அணுகாமல் அறிவுப் பூர்வமாக அணுகி ஆராய வேண்டும்” என புதுவையில் உள்ள பிரஞ்ச் ஆராய்ச்சி மைய பேராசிரியர் விஜயவேணுகோபால் தெரிவித்தார்.
காந்திகிராம பல்கலையில் தமிழ்த்துறை, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தொல்லியல் நோக்கில் சங்க இலக்கியங்கள் தலைப்பில் பயிலரங்கு நடந்தது. துணை வேந்தர் நடராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் பிச்சை வரவேற்றார்.
ஆராய்ச்சி மைய பேராசிரியர் பேசியதாவது: சங்க இலக்கியங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகாமல் அறிவுப் பூர்வமாக அணுகி ஆராய வேண்டும். ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் 1860 ல் தொல்லியல் துறையை துவக்கி கல்வெட்டுகளை ஆராய்ந்தனர். அதன்பின்பே, இந்தியர்களும் ஆராய துவங்கினர். பிராமி எழுத்துக்கள் பொறித்த தமிழ் கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை. பிராமி எழுத்துகள் தமிழுக்கு உரியதா, இலங்கையில் இருந்து வந்ததா என்பதை ஆராய வேண்டும்.
தமிழ் பிராமிக்கும், தொல்காப்பிய எழுத்துக்களுக்குமான தொடர்புகள் குறித்து ஆராயலாம். அகழாய்வில் கிடைத்த சான்றுகள், பொருட்கள் இலக்கியத்தோடு தொடர்புடையது என்பதை நிரூபிக்க வேண்டும். சமண, புத்த கோட்பாடுகளே தமிழ்க் கோட்பாடாக மாணவர்களுக்கு கற்று தரப்படுகிறது. இது சரியான கற்பித்தல் முறை அல்ல. சங்க இலக்கியத்தில் திணை, துறைகள் குறித்த விளக்கங்களில் உரையாசிரியர்களிடையே கருத்து மாறுபாடுகள் உள்ளன. இவற்றை நுட்பமாக அறிந்து வெளிப்படுத்த பல்துறை தமிழியல் ஆய்வுகள் அவசியம், என்றார்.
