மதுரையில் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நாளை துவக்கம்
மதுரையில் ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி நாளை துவக்கம்
UPDATED : அக் 16, 2015 12:00 AM
ADDED : அக் 16, 2015 10:46 AM
மதுரை
: பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில்
எப்படி படித்தால் முழு மதிப்பெண்கள் பெறலாம் என்று மாணவர்களுக்காக, பல்வேறு ஆலோசனைகளை அள்ளித் தரும் தினமலர் ஜெயித்துக்
காட்டுவோம் நிகழ்ச்சி, பசுமலை மன்னர்
திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை (அக்.,17) துவங்குகிறது.
டி.வி.ஆர்., அகாடமி மற்றும் தினமலர் நாளிதழின் கல்வி மலர் வழங்கும் இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பில் பொதுப் பாடத் திட்டத்தில் முக்கியத்துவம் தரவேண்டிய பகுதிகள் எவை, முழு மதிப்பெண் பெறுவதற்கான முக்கிய வினாக்கள் எவை, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும் சூத்திரம் என்ன, பயமின்றி தேர்வை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை எவ்வாறு வளர்த்துக்கொள்வது போன்ற பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்படும். பாடங்கள் வாரியாக நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.
நாளை காலை (9.30 மணி முதல் 12.30 மணி வரை) பத்தாம் வகுப்பு தமிழ்வழி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், சேதுபதி பள்ளி ஆசிரியர் ஆதிஞானகுமரன் (ஆங்கிலம்), களிமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் (கணிதம்), சென்னை மாநகராட்சி பள்ளிகள் சிறப்பு பயிற்றுனர் பாலாஜி (அறிவியல்), மேலுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் முனைவர் சூர்யகுமார் (சமூக அறிவியல்) ஆகியோர் பேசுகின்றனர். மதியம் (2 மணி முதல் 5 மணி வரை) நடக்கும் ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில்,
சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பழனிவேல்ராஜன் (ஆங்கிலம்), வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் புவனேஷ்பாபு (கணிதம்), சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கணேசன் (அறிவியல்), சென்னை மாநகராட்சி பள்ளிகள் சிறப்பு பயிற்றுநர் பாலாஜி (சமூக அறிவியல்) ஆகியோர் பேசுகின்றனர். இரண்டு நிகழ்வுகளிலும், தன்னம்பிக்கை குறித்து குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் முனைவர் சங்கர்ராமன் பேசுகிறார். நாளை மறுநாள் (ஞாயிறு) பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி காலை 9:30 மணிக்கு நடக்கிறது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை, மதுரை பசுமலை மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி மற்றும் பூர்விகா மொபைல் உலகம் ஆகியன இந்நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றன. பங்கேற்கும் மாணவர்களுக்கு வினா வங்கி புத்தகம் வழங்கப்படும். மாணவர்களே வாருங்கள், அனுமதி இலவசம்.
