UPDATED : நவ 23, 2015 12:00 AM
ADDED : நவ 23, 2015 10:57 AM
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ்:
நேரத்தை கடைபிடிக்க வேண்டும் அமிர்தம், (தமிழ்): கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் இருத்தல் வேண்டும். தேர்வின் போது நேரத்தை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். படித்ததை உடனுக்குடன் எழுதிப்பார்க்க வேண்டும். மனப்பாட பகுதிகளை பிழை இல்லாமல் எழுத வேண்டும். முதல் தாளில், நெடு வினாக்களுக்கு, செய்யுள், திருக்குறள், மறுமலர்ச்சி பாடல்கள் மற்றும் தொடர்நிலைச் செய்யுள் பகுதிகளை முற்றிலுமாக படித்தால், 80லிருந்து, 90 மதிப்பெண்கள் பெற்று விடலாம்.
இரண்டு
மதிப்பெண் மற்றும் நான்கு மதிப்பெண் வினாக்கள் எழுதும்போது, செய்யுள் அல்லது திருக்குறள் பாடல்களை மேற்கோள் காட்டி எழுதினால்,
முழுமையான மதிப்பெண் பெற்று விடலாம். புள்ளி,
கமா போன்றவைகளை சரியான இடத்தில் இட வேண்டும்.
சந்திப்பிழை மற்றம் ஒற்றுப்பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தல் வேண்டும்.
துணைப்பாட
கட்டுரைகள் எழுதும் போது, முன்னுரை, உப தலைப்புகள் மற்றும் முடிவுரை எழுத வேண்டும். கதையை புரிந்து
கொண்டு, நீங்கள் உங்கள் நடையில் எழுத வேண்டும்.
கதை உணர்த்தும் நீதியை எழுதினால் முழு மதிப்பெண் பெறுவதற்கு உபயோகமாக இருக்கும்.
இரண்டாம் தாளில்
உரைநடை பகுதிகளை நன்றாக பயிற்சி எடுக்க வேண்டும். நெடுவினாக்கள் எழுதும் போது,
துணை தலைப்புகள் போட்டு எழுத வேண்டும்.
மேற்கோள் காட்டுவதற்கு கருப்பு மை பேனாக்களை உபயோகப்படுத்த வேண்டும்.
இதைத்தவிர வேறு
கலர் பேனாக்களை உபயோகப்படுத்தக்கூடாது. முக்கியமான வார்த்தைகளை கோடிட்டு காட்ட
வேண்டும். தேர்விற்கு, 10 நிமிட முன்பு தேர்வு அறைக்குச்செல்ல
வேண்டும். பதட்டமில்லாமல் தேர்வினை எழுத வேண்டும். எழுதியபின் விடைத்தாளை
படித்துப்பார்க்க வேண்டும்.
பிழை இல்லாமல்
எழுதுங்க
திலகவதி,
(ஆங்கிலம்): மாணவர்கள் அனைவரும், முதலில் ஆங்கிலத்தைக்கண்டு பயப்படுவதை நிறுத்த வேண்டும்.
விரும்பிப்படித்தால் ஆங்கிலமும் சுலபமே. ஸ்பெல்லிங்
மிஸ்டேக் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனப்பாட பாடல்கள் படிக்கும் போது வாய்விட்டு படித்தல் வேண்டும். படித்ததை திரும்ப
திரும்ப எழுதி பார்த்தால், ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை குறைக்கலாம். முதல் தாளில் பாராகிராப் மற்றும் மனப்பாட பகுதிகளை
படித்தால், 80 சதவீத மதிப்பெண் பெறலாம். அமெரிக்கன்
மற்றும் பிரிட்டன் ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி அவசியம். படித்ததை திரும்ப, திரும்ப எழுதிப்பார்த்தல் வேண்டும்.
பாராகிராப்
வினாக்களுக்கு, 1, 2, 3, மற்றும் 5ம் பாடங்களையும், நெடுவினாக்களுக்கு, 1, 2, 3, 4 மற்றும் 6ம் பாடங்களையும் படிக்க வேண்டும்.
இரண்டாம் தாளில் துணைப்பாடம், இலக்கணம் மிகவும் முக்கியமானவை.
இலக்கணத்தை வகுப்புகளில் நடத்தும் போதே தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
புரியவில்லையென்றால் உடனுக்குடன் ஆசிரியரிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள
வேண்டும். துணைப்பாட கட்டுரைகள் எழுதும் போது, முன்னுரை, உப தலைப்புகள் மற்றும் முடிவுரைகள்
போட்டு எழுதினால் அதிக மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும். விடைத்தாள் பிரசன்டேசன் மிக
மிக முக்கியம்.
தோல்வியை கண்டு
துவளாதீர்
கவுசல்யா,
கம்ப்யூட்டர் சயின்ஸ்: கல்வி என்பது உன்னுடைய
வாழ்க்கை; அதை நீ உனக்காக செதுக்கிக்கொள்ள
வேண்டும். அப்போதுதான் உன் வாழ்க்கை என்ற சிற்பம் அழகாக வரும்.
கம்ப்யூட்டர் சயின்ஸில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஒரு மதிப்பெண்ணில், 70 மதிப்பெண் சுலபமாக பெற்று விடலாம். கமாண்ட் வார்த்தைகளை உபயோகிக்கும் போது, அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். கீ வேர்ட்ஸ்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.
ஐந்து மதிப்பெண்
வினாக்களுக்கு, 6 மற்றும் 7 ம் பாடத்தை முழுமையாக படித்தால் போதுமானது. சிபிபி மற்றும் ஸ்டார்
ஆபிஸ் என இரண்டு லாங்வேஜ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் செய்முறை
பயிற்சியில் மிக உதவியாக இருக்கும்.சிபிபியை முழுமையாக படித்தால், 45 ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முடியும். சார்ட்டையக்ராம்
மிக முக்கியமானது. புரோக்கிராம்களை நன்றாக புரிந்துகொண்டு போட வேண்டும்.
புரோகிராம்களை
மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்துகொண்டு படிக்காமல், நன்றாக புரிந்துகொண்டு படித்தால், ஐ.டி துறையில் சாதிக்க உதவியாக இருக்கும். புரோகிராமிற்கு 4 -
9 ம் பாடங்களை படிக்க வேண்டும். தேர்வுத்தாள்
மிக தெளிவாக இருத்தல் வேண்டும். ஓ.எம்.ஆர் தாளை பயன்படுத்தும் போது மிக கவனத்துடன்,
பேனாவால் முழுமையாக சேடு செய்ய வேண்டும்.
தொடர் பயிற்சியே
வெற்றி
நாகராஜ்,
இயற்பியல்: வினா எண்களை கண்டிப்பாக எழுத
வேண்டும். இயற்பியலில் வரும் கணக்குகளை தினமும் போட்டு பார்க்க வேண்டும்.
புத்தகத்தில் பின்னால் உள்ள அனைத்து வினாக்களையும் படித்துக்கொள்ள வேண்டும்.
சர்க்யூட் வரைபடம் வரையும் போது பென்சில், ஸ்கேல்
உபயோகப்படுத்த வேண்டும். 2 மற்றும் 7 ம் பாடங்களை முழுமையாக படித்தால் 5 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்க முடியும்.
பத்து மதிப்பெண்
வினாக்களுக்கு, 1, 4, 6 மற்றும் 8 ம் பாடங்களை படிக்க வேண்டும். ப்ளூ பிரிண்டை முழுமையாக படிக்க
வேண்டும். கேட்ட கேள்விக்கு மட்டுமே விடையளிக்க வேண்டும். கதைகளை எழுதக்கூடாது.
இதனால் மதிப்பெண் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரைபடங்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பழைய வினாத்தாளை
திரும்ப திரும்ப பயிற்சி எடுக்க வேண்டும். விடைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும்
எழுதினாலே முழு மதிப்பெண் பெற்றுவிடலாம்.
புரிந்து
படித்தால் எளிது
ரகுவரன்,
வேதியியல்: வேதியியலில் மிக முக்கியமானவை
சமன்பாடுகள். சமன்பாடுகளை தினமும் எழுதிப்பயிற்சி எடுக்க வேண்டும். ப்ளூ
பிரிண்டில் உள்ளதை படித்தாலே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். பழைய
வினாத்தாள்களில் திரும்ப, திரும்ப வரும் வினாக்களுக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். புத்தகத்திற்கு பின்பக்கம் உள்ள அனைத்து
வினாக்களையும் படிக்க வேண்டும். தனிம அட்டவனைகளை நன்றாக மனப்பாடம் செய்துக்கொள்ள
வேண்டும்.
மாலிக்குலார்
வேதியியலில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 10 மதிப்பெண், வினாக்களுக்கு ஏற்ப பாடங்களை தேர்வு
செய்து படிக்க வேண்டும். மூலக்கூறு வாய்ப்பாடுகளை நன்றாக தெரிந்து வைத்திருக்க
வேண்டும். 1 - 12, 16, 17 மற்றும் 22ம் பாடங்களை முழுமையாக படித்தால் முழுமதிப்பெண்களை பெற்று விடலாம்.
அனைத்து வெற்றிகளுக்கும் முழுமையான பயிற்சியே காரணம். அதனால் நன்றாக பயிற்சி
செய்தால் வெற்றி உங்கள் கையில்.
வரைபடத்திற்கு
முக்கியத்துவம்
நிவேதிதா,
உயிரியல்: வினாத்தளில் உள்ள ஆர்டர் படியே எழுத
வேண்டும். உயிரியலில் வரைபடங்கள் தான் மிக முக்கியமானவை. அதில் அதிக கவனம் செலுத்த
வேண்டும். வினாக்களை தேர்வு செய்யும் போது படங்கள் உள்ள வினாக்களை தேர்வு செய்தால்
மதிப்பெண்களை சுலப மாக பெற்று விடலாம். 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எழுதும் போது, பாயின்ட் பாயின்டாக எழுத வேண்டும். முக்கியமான வாரத்தைகளை கருப்பு மை
பயன்படுத்தி எழுதினால் நன்றா இருக்கும். தாவரக்குடும்பங்களில், மால்வேஸி மற்றும் சொலானேசி இரண்டையும் படித்தால் போதுமானது.
விலங்கியல் முதல் பாடத்தை இரண்டாக பிரித்து படிக்க வேண்டும். முதல், 40 பக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். தாவரவியலில், 1 மற்றும் 5வது பாடங்களையும், விலங்கியலில், 3வது பாடத்தை முழுமையாக படிக்க வேண்டும்.படம் வரைந்து பாகங்களை குறிக்கும் போது, படத்திற்கு அருகிலே குறிக்க வேண்டும். வரைபடங்கள் வரையும் போது பென்சிலால் அழகாகவும், தெளிவாகவும் வரைய வேண்டும். படங்கள் தெளிவாக இருந்தால் முழு மதிப்பெண் போட்டு விடுவார்கள். என்னதான் படித்தாலும், உங்கள் விடைத்தாள் பிரசன்டேசன் தெளிவாக இருத்தல் மிக முக்கியமானது.
