திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை
திறன் அடிப்படையில் சம்பளம்? ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் பரிந்துரை
UPDATED : நவ 23, 2015 12:00 AM
ADDED : நவ 23, 2015 11:03 AM
புதுடில்லி
:
ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன், மத்திய அரசின் அனைத்து பிரிவு
ஊழியர்களுக்கும், திறன் அடிப்படையிலான சம்பளம் வழங்க
பரிந்துரைத்துள்ளது.
ஏழாவது மத்திய சம்பளக் கமிஷன் அளித்த பரிந்துரைகள் விவரம்:மத்திய அரசின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் திறன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் செயலாற்றல், வகுக்கப்பட்ட வரையறைக்கு உட்படவில்லை எனில், வருடாந்திர ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது. சிறந்த செயலாற்றலுக்கான அளவீட்டை, நன்று என்பதில் இருந்து, மிக நன்று&' என உயர்த்த வேண்டும். பணியில் சேர்ந்த, 20 ஆண்டுக்குள், நிர்ணயிக்கப்பட்ட திறன் அளவீட்டை எட்ட முடியாத அரசு ஊழியர்களுக்கு, வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். திறன் மேம்படாத ஊழியர்கள், தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
