தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆய்வகத்தில் மாணவர் தற்கொலை; ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்?

பள்ளி ஆய்வகத்தில் மாணவர் தற்கொலை; ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்?

பள்ளி ஆய்வகத்தில் மாணவர் தற்கொலை; ஆசிரியர் கண்டித்ததால் விபரீதம்?


UPDATED : ஜன 06, 2016 12:00 AM

ADDED : ஜன 06, 2016 10:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2016 12:00 AM ADDED : ஜன 06, 2016 10:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை
: காரைக்குடி அருகே பள்ளத்துார் அருணாச்சலம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி ஆய்வகத்தில் பிளஸ்
2 மாணவர் பிரகாஷ், 17, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதே ஊரை சேர்ந்த சலவைத் தொழிலாளி மாயாண்டி மகன் பிரகாஷ் பிளஸ் 2 படித்தார். நேற்று காலை 11.15 மணிக்கு, பள்ளி ஆய்வகத்தில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப் பதியப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

அறிவியல் பாடத்தில் அசைன்மென்ட் கொடுத்து, வீட்டில் அதை படித்து வருமாறு ஆசிரியர் ஒருவர் கூறினார். இதை செய்யாததால் பிரகாஷ், இரண்டு மாணவிகள் உட்பட 12 பேரை கண்டித்த ஆசிரியர், சற்று நேரம் வெளியே சென்று படித்து விட்டு வருமாறு எச்சரித்தார். மற்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் வகுப்பிற்கு திரும்பினர். பிரகாஷை நீண்ட நேரமாக காணவில்லை. சக மாணவர்கள் தேடியபோது, உட்புறமாக பூட்டியிருந்த ஆய்வகத்திற்குள் புகை வருவது தெரிந்தது.

அதை திறந்த போது, ஆய்வக பயன்பாட்டிற்கான மண்ணெண்ணெய்யை ஊற்றி பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. ஆசிரியர் கண்டித்ததால், விரக்தியில் தற்கொலை செய்திருக்கலாம் என விசாரிக்கிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.

கலெக்டர் மலர்விழி, ஜியாவுல்ஹக் எஸ்.பி., முதன்மைக் கல்வி அதிகாரி செந்திவேல்முருகன் உள்ளிட்டோர் பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us