UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 10:40 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரை மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சீனிவாசமூர்த்தி
தெரிவித்துள்ளதாவது:
மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்கு உட்பட்ட மெட்ரிக் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் அடிப்படையில், நலிவடைந்த குழந்தைகளுக்கு நுழைவு வகுப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சேர்க்கை அளிக்க வேண்டும்.
மேலும், 2016ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஒரு சில பள்ளிகளில் டிசம்பரில் துவங்கியதாக தெரிய வருகிறது. இதுவிதிக்கு புறம்பானது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் உத்தரவுப்படி மாணவர் சேர்க்கை ஏப்ரலில் தான் துவக்க வேண்டும். மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.
