UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 10:44 AM
கிருஷ்ணகிரி
:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்,
மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு துவங்கியது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார் பில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 3, 5 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு நேற்று துவங்கியது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த தேர்வை கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில், சி.இ.ஓ., தமிழரசு துவக்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது: மாவட்டம் முழுவதும், 10 யூனியன்களில் உள்ள, 260 பள்ளிகளில், மாநில அளவிலான கற்றல் அடைவு தேர்வு நடக்கிறது. 6950 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
