UPDATED : ஜன 06, 2016 12:00 AM
ADDED : ஜன 06, 2016 11:01 AM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங் மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், எட்டு ஆண்டுகளாக பணியாற்றினார். மேலும், அண்ணா பல்கலையின், ராமானுஜம் கணினி மைய இயக்குனராகவும் இருந்தார்.
இவரது பணி காலத்தில், கவுன்சிலிங்கில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், மாணவர் சேர்க்கை செயலர் பதவியில் இருந்து, ரைமண்ட் உத்தரியராஜ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பிரிவு பேராசிரியை இந்துமதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் செயலராகவும், ராமானுஜம் கணினி மைய இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
