தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் அறிஞர்களுக்கு விருது

தமிழ் அறிஞர்களுக்கு விருது

தமிழ் அறிஞர்களுக்கு விருது


UPDATED : ஜன 14, 2016 12:00 AM

ADDED : ஜன 14, 2016 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2016 12:00 AM ADDED : ஜன 14, 2016 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தொண்டாற்றி பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரால், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகளை பெறுவோர் விவரத்தை, முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில், ஜன., 16ல் நடைபெறும், திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசு விருது வழங்கும் விழாவில், இந்த விருதுகளை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விருது பெறுவோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும். வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், 46 பேருக்கு, நிதியுதவி வழங்குவதற்கான அரசாணை அந்த விழாவில் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us